என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர் கைது"
பாதுகாப்பிலும் மற்ற ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்டுகளைவிட அதிக நம்பகத்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஹேக் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்த ஹேக்கிங் சம்பவத்தில் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு அந்த மாணவர் ஈடுப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த மாணவரின் வக்கீல் கூறுகையில், ‘ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும் என நம்பியுள்ளான். மேலும் ஹேக்கிங் செய்தால் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரியாமல் தவறு செய்துள்ளார்’ என வாதாடினார்.
இதையடுத்து அந்த மாணவருக்கு ரூ.35000 அபராத தொகை செலுத்த உத்தரவிட்டு, மாணவரின் 9 மாத கால நன்னடத்தை சான்றிதழை போலீசார் வழங்குமாறும் கோர்ட் உத்தரவிட்டது.
பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ஸ்ரீநாத். தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகினார்.
இந்த நிலையில் ஸ்ரீநாத், எதிர்கால வாழ்க்கை குறித்து பேசவும், பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் கூறி மாணவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
இதனை நம்பிய மாணவி, ஸ்ரீநாத்தின் வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரது பெற்றோர் இல்லை. இதனை தொடர்ந்து மாணவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று தனது குழந்தை பருவ புகைப்படத்தை காண்பித்ததாக ஸ்ரீநாத் கூறினார்.
அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டப்படி மற்றொரு அறையில் ஸ்ரீநாத்தின் நண்பரான யோகேஷ் மறைந்து இருந்தார்.
அவர், ஸ்ரீநாத்தும் மாணவியும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வீடியோவாகவும், மாணவியை ஆபாசமாகவும் புகைப்படம் எடுத்தார்.
இதற்கிடையே மறுநாள் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீநாத், மாணவியிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டினார். மேலும் இதனை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாகவும் கூறினார்.
இதனை செய்யாமல் இருக்க மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும். கூடுதலாக பணம் தர வேண்டும் என்று ஸ்ரீநாத்தும், யோகேசும் மாணவிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத், யோகேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னம் புலத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் நேற்றும் அதே சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஏதும் அறியாத சிறுமியை 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பலாத்காரம் செய்தது சமூக அவலத்தை வெளிப் படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற மனநிலை உருவாக என்ன காரணம்? என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் நல்லொழுக்கம் கடைபிடிக்க பாடதிட்டங்களில் மாற்றம் தேவை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரவளி. இவர் வரங்கலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இதே கல்லூரியில் சங்கம் கிராமத்தை சேர்ந்த சாயி அன்வேஷ் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இவர் மாணவி ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் சாயி அன்வேஷ் காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ரவளி மறுத்து விட்டார்.
இன்று காலை ரவளி கல்லூரி நுழைவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாயி அன்வேஷ் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.
இதை பார்த்து சக மாணவர்கள் சாயி அன்வேஷ் ஆசிட் வீசுவதாக நினைத்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். அப்போது சிகரெட் லைட்டரை ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.
இதில் ரவளி உடலில் தீப்பிடித்து எரிந்தது. அலறி துடித்த அவரை மாணவர்கள் தீயை அணைத்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தீயில் கருகிய மாணவி ரவளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். #Love ##RavaliRao
போரூர்:
கோயம்பேடு நூறடி சாலையில் இன்று காலை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் வணிக வளாகம் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.
அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஜூமோன்மியா (வயது20) என்பதும் பாண்டிச்சேரியில் தங்கி மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நஜூமோன்மியா யாரிடம் இருந்து கஞ்சா பெற்றார், கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வருகிறாரா என்கிற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
கொத்தவால்சாவடி, ஆறுமுகம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று மாலை அவர் திரும்பி வந்த போது வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இது பற்றி கொத்தவால் சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தர்ஷன் கொள்ளையடித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து தர்ஷனை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகை-பணம் மீட்கப்பட்டது. கைதான தர்ஷன் மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.
மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
திருவொற்றியூர் சுங்க சாவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி ‘6டி’ மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் பயணம் செய்தனர்.
தியாகராஜர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்கும் போது உள்ளே இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் வெளியில் நின்ற மாணவர்களை பார்த்து கிண்டல் செய்தனர். அப்போது பஸ் புறப்பட துவங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பஸ்சை விரட்டிச் சென்று பஸ்சுக்குள் ஏற முயன்றனர். ஆனால் பஸ் நிற்கவில்லை.
உடனே ஆவேசத்தில் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல்வீசிய மாணவர்களை பிடிக்க பயணிகள் முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர்கள் ஓடிவிட்டனர்.
இதுபற்றி டிரைவர் ராஜேந்திரன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர் மகேஷ் என்பவரை கைது செய்தனர். இவர் தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
மேலும் 6 மாணவர்களை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பாண்டி (18) என்பவரும் படித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
பாண்டியுடன் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.
ஆனால் மாணவர் பாண்டி திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாநகரில் சமீப காலமாக சாலையில் நடந்து செல்பவர்களிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விபின்(வயது 18), வடகோவையை சேர்ந்த கார்த்திக்(18), தடாகம் ரோட்டை சேர்ந்த ரோகித்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்களில் கார்த்திக் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
விபின் கார் மெக்கானிக் ஆவார். ரோகித் வாஷிங்மிஷின் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் சொகுசாக வாழ ஆசைப்பட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறினார். இவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் காட்ரோடு பிரிவில் தனியார் பள்ளி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து காரில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. காரில் வந்த விருதுநகர் மாவட்டம் அள்ளம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது35), அஜய் (22) ஆகிய2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இவர்கள் இதேபோல் பல ஊர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட அஜய் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்